சோம்பேறி.....

அனைவரும் என்னை மன்னிக்கவும்..... நான் ஒரு சோம்பேறி..... தாந்தேவை மொழியாக்கம் செய்ய நினைத்தேன் முடியவில்லை.... தற்பொழுது எட்டாவது வட்டத்தில் உள்ளேன் முடித்து விட்டு முழுமையாக ஒரு பதிவை போடுகிறேன்.....

The Inferno (நரகம்) - காண்டோ 1






காண்டோ 1: இருள் கவிழ்ந்து கொண்டிருந்த அந்த அடர்ந்த கானகத்தின் ஊடே வழியினை தொலைத்து விட்டு செய்வதறியாது திகைத்து கொண்டிருந்தார் அந்த எழுத்தாளர். காட்டு மிருகங்களின் இடையூறுகளால் மலை ஏற முடியாமல் திணறி கொண்டிருந்த அவர் விர்கில் ஐ சந்தித்தார். விர்கில் அவருக்கு நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனை களையும் அவற்றை கடந்தவைகளையும் காண்பிப்தாக உறுதி அளித்தார். பின் அங்கிருந்து பெட்ரிஸ் இன் மூலம் சொர்கத்திற்கு வழி நடத்தபடுவோம் என்றும் கூறினார் . ரோம கவியினை தவிர வேறொருவரும் இல்லாத நிலையில் மறு பேச்சின்றி பின் தொடர்ந்தார் தாந்தே.

தாந்தே - நரகம்





தாந்தேவினுடைய "The Inferno" - நரகம் என்ற நூலை தற்செயலாக கூகிள் புக்ஸ் இல பார்க்க நேர்ந்தது. நம்ம அந்நியனில் வருகின்ற கருட புராணம் மாதிரியே இருந்தது. அதை என்னுடைய பயனிர்காகவாவது மொழி பெயர்த்து வைத்துக்கொள்ளலாம் என்ற வொரு நப்பாசை. அதன் முயற்சியே இந்த சங்கிலி தொடர்கள்.............

வாழ்வின் மறு கரை

வாழ்வின் மறு கரை

ஊர் தெப்ப குளத்தில் கார்த்திகை கொண்ட்டாட்டம்
நல்லான் சுள்ளான் எல்லாம் நீரில் நீந்தி கொண்டிருக்க 
ஒரு தைரிய கீற்று 
மெதுவாக படிகளில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் ஆட்டம் 
என்னையும் அறியாமல் எழாம் உலக கை ஒன்று 
உந்தி தள்ள 
மௌனமாய் எவ்வித எதிர்ப்பும் இன்றி 

நீரின் உணவுக் குழாய்களில்
வழுக்கி கொண்டு 

காற்றுப் பைகளில் நீர் குமிழிகள் 
பொங்கல் வைக்க

கைகள் பிடிபிற்காக ஏங்க!!!!!!
ஏதோ ஒரு பிரபஞ்சத்தில் தொலைந்த உணர்வு 

இருளின் முடிவில் சூன்யம் 

தலையில் திடீரென்று மின்சாரம் பாய்ச்சப்பட்டது 
இரு கைகளில் ஏன் முடி கற்றைகள்.........

அந்த சில நொடிகள் பிற்காலத்தில் 
என்னை நிறைய யோசிக்க வைத்தன 

எனது தேடல்களின் முடிவுகள் 
ஒரு தொடர் கதை 
சில சமயம் பதில்கள் 

நானாய்..................

விந்யன்

விந்யன் - உறங்காத ஆவி  


இயக்கம் - பாப்ரிஸ் து வெல்ஸ் 

எழுத்து - ஒலிவெர் பிளாக் பர்ன் மற்றும் பாப்ரிஸ் து வெல்ஸ்  



உப்பு கடலின் சத்தமும், மனித குரல்களின் மரண ஓலதோடும் எழுத்துக்களின் பிரவாகம் ஆரம்பிக்கிறது. இம்மானுவேல் பெர்த் பிகினி உடையில் தோன்றும் பொழுது மனதிற்குள் பெரு மூச்சு.


அன்று இரவு தற்செயலாக விருந்து ஒன்றிற்கு செல்ல நேரிடுகின்றது.இம்மானுவேல் பெர்த் அந்த விருந்தில் அவரது கணவருடன் நாம் சொல்ல முடியாத மௌன இடைவெளியில் படம் நகர்கிறது. விருந்தில் பர்மீஸ் எல்லையில் எடுக்கப்பட்ட ஏழை குழந்தைகளின் வாழ்கை சித்தரிகபடுகின்றது. திடீரென்று பெர்த் சிகப்பு உடை அணிந்த பய்யனை பார்த்து " அது என் மகன் " என்று குக்குரல் இடும்பொழுது நமக்கு புரிய ஆரம்பிக்கிறது. அவர்கள் மகன் சுனாமியில் அடித்து செல்ல பட்டது.


அதன் பிறகு அவனை தேடி தாய் - பர்மீஸ் எல்லையில் உள்ள அடர்ந்த காடுகளின் ஊடே பயணங்கள் ஆரம்பிக்கிறது. இது வரை நாம் பார்த்திராத ஒரு அற்புத உலகம் நாம் கண் முன்னால் விரிகின்றது...... நாம் நினைப்பது போல நமது ஊரில் மட்டும்தான் லஞ்சம் இல்லை உலகத்தின் மூலை முடிகில் எல்லாம் பணம். அந்த கடல் நீரின் மீது பயணம் மேற்கொள்ளும் அழகே தனி. ஜொலிக்கும் நீரின் மேல் கருப்பு மிருகம் ஊர்வது போல் ஒரு பயணம். 

அதன் பிறகு அவர்கள் போய் சேருவது ஒரு இடை தரகனிடம் அரு தனி தீவிற்குள் அதற்கு பின் காட்சிகள் நகர்வது படு சுவாரசியமாக தொடாமல் ரசிகப்படும் விலை மாதுக்கள். முக்தி பெறாத உயிர்களுக்காக கொண்டாடப்படும் விழா. ஆண் மகனின் தொடுதல்லுக்காக ஏங்கும் வெள்ளை அராய்ச்சியாளர். துரோகிகளுக்கு வழங்கப்படும் பரிசு மரணம் என ஒரு இருளின் ஊடே நகர்கிறது படம் அடுத்த நாள் கலை அவர்களின் பயணம் துவங்குகிறது. இது வரை நாம் பார்த்திராத இயற்கை சூழல் நம்மை வியக்க வை கின்றது. இது வரை நம் வாழ்வில் பார்த்திராத உலகிற்கு நம்மை அழைத்து செல்கிறார் பாப்ரிஸ். கடைசியாக ஒரு மர்ம தேசத்தில் நுழைகிறார்கள். கருப்பு காட்டுவாசிக் குழந்தைகள், விட்டு விட்டு போன படகு காரன் என பல திருப்பங்கள். தங்களது குழந்தையை தேடி போய் ஆபத்தில் மாட்டி விடும் ஜோடி. திரும்ப வழி இல்லாமல் ஒரு விதமான மன சிதைவுக்கு இம்மானுவேல் பெர்த் ஆளாகிவிட தனது கணவனையே தன் குழந்தையை கொன்றதாக குற்றஞ் சாட்டுகிறாள். மர்மமான முறையில் 


அங்கு தோன்றும் அந்த குழந்தைகள் அவர்களை சுற்றி இருந்தவர்களை கொன்று விட்டு அவர்களை திரும்பி பார்க்கின்றனர். பெர்த் தலைவியாகிறாள். குழந்தைகள் அவளை தொடுக்கிறார்கள். பெர்த் ஒரு வித மன சிதைவோடு வானத்தை பார்த்து சிரிக்க குழந்தைகள் அவளின் முலை காம்புகளை தடுவி கொடுபொதொடு படம் முடிவடைகிறது. இதில் என்னை கவர்ந்தது பாப்ரிஸ் து வெல்ஸ் இயக்கமும் அவர் தேர்ந்தெடுத்த இடமகளும் தான். It is simply Marvelous and fuckin freekin.

நான் பார்த்த மிக சிறந்த திரை படங்களில் இதுவும்...


If a body is what you want,

then here is bone and gristle and flesh.

Here is the clavicle-snapped wish,

the aorta's opened valves, the leap

thought makes at the synaptic gap.

Here is the adrenaline rush you crave,

that inexorable fight, that insane puncture

into heat and blood. And a dare you to finish

what you've started. Because here, Bullet,

here is where I complete the word you bring

hissing through the air, here is where I moan

the barrel's cold esophagus, triggering

my tongue's explosives for the rifling I have

inside of me, each twist of the round

spun deeper, because here, Bullet,

here is where the world ends, every time.

-- By Brian Turner (A poem currently being passed around among American soldiers in Iraq) 


நானாய்..................

ஊர் தெப்ப குளத்தில் கார்த்திகை கொண்ட்டாட்டம்

நல்லான் சுள்ளான் எல்லாம் நீரில் நீந்தி கொண்டிருக்க 
ஒரு தைரிய கீற்று 
மெதுவாக படிகளில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் ஆட்டம் 
என்னையும் அறியாமல் எழாம் உலக கை ஒன்று 
உந்தி தள்ள 
மௌனமாய் எவ்வித எதிர்ப்பும் இன்றி 

நீரின் உணவுக் குழாய்களில்
வழுக்கி கொண்டு 

காற்றுப் பைகளில் நீர் குமிழிகள் 
பொங்கல் வைக்க

கைகள் பிடிபிற்காக ஏங்க!!!!!!
ஏதோ ஒரு பிரபஞ்சத்தில் தொலைந்த உணர்வு 


இருளின் முடிவில் சூன்யம் 

தலையில் திடீரென்று மின்சாரம் பாய்ச்சப்பட்டது 
இரு கைகளில் ஏன் முடி கற்றைகள்.........

அந்த சில நொடிகள் பிற்காலத்தில் 
என்னை நிறைய யோசிக்க வைத்தன 

எனது தேடல்களின் முடிவுகள் 
ஒரு தொடர் கதை 
சில சமயம் பதில்கள் 


நானும் எனது தேடல்களும்

அனைவருக்கும் வணக்கம்

இது எனது இரண்டாவது முயற்சி........
நான் தற்பொழுது இந்தியாவை விட்டு தூரத்தில்
என்னுடைய கற்பனைகள், தேடல்கள், படித்தவைகள், கேட்டவைகள், பார்த்தவைகள் மற்றும் என்னுடைய புலன்களினால் உணர்த்து கொண்டவற்றை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்........
இது தேனடையகவும், பூவாகவும், மௌனமாகவும் இருக்க விரும்புகிறேன்
இங்கு உங்களது கருத்துக்கள்,விவாதங்கள்,தகவல் பரிமாற்றங்கள் தேவைப்படுகிறது........

என்னுடைய கருத்துக்களையோ, தகவல்களையோ,ரசித்தவைகலையோ தாரளமாக நீங்கள் விமர்சிக்கலாம்.......

இனி எனக்குப் பிடித்தவைகள்........


இரவுப் பறவை