இயக்கம் - பாப்ரிஸ் து வெல்ஸ்
எழுத்து - ஒலிவெர் பிளாக் பர்ன் மற்றும் பாப்ரிஸ் து வெல்ஸ்
உப்பு கடலின் சத்தமும், மனித குரல்களின் மரண ஓலதோடும் எழுத்துக்களின் பிரவாகம் ஆரம்பிக்கிறது. இம்மானுவேல் பெர்த் பிகினி உடையில் தோன்றும் பொழுது மனதிற்குள் பெரு மூச்சு.
அன்று இரவு தற்செயலாக விருந்து ஒன்றிற்கு செல்ல நேரிடுகின்றது.இம்மானுவேல் பெர்த் அந்த விருந்தில் அவரது கணவருடன் நாம் சொல்ல முடியாத மௌன இடைவெளியில் படம் நகர்கிறது. விருந்தில் பர்மீஸ் எல்லையில் எடுக்கப்பட்ட ஏழை குழந்தைகளின் வாழ்கை சித்தரிகபடுகின்றது. திடீரென்று பெர்த் சிகப்பு உடை அணிந்த பய்யனை பார்த்து " அது என் மகன் " என்று குக்குரல் இடும்பொழுது நமக்கு புரிய ஆரம்பிக்கிறது. அவர்கள் மகன் சுனாமியில் அடித்து செல்ல பட்டது.
அதன் பிறகு அவனை தேடி தாய் - பர்மீஸ் எல்லையில் உள்ள அடர்ந்த காடுகளின் ஊடே பயணங்கள் ஆரம்பிக்கிறது. இது வரை நாம் பார்த்திராத ஒரு அற்புத உலகம் நாம் கண் முன்னால் விரிகின்றது...... நாம் நினைப்பது போல நமது ஊரில் மட்டும்தான் லஞ்சம் இல்லை உலகத்தின் மூலை முடிகில் எல்லாம் பணம். அந்த கடல் நீரின் மீது பயணம் மேற்கொள்ளும் அழகே தனி. ஜொலிக்கும் நீரின் மேல் கருப்பு மிருகம் ஊர்வது போல் ஒரு பயணம்.
அதன் பிறகு அவர்கள் போய் சேருவது ஒரு இடை தரகனிடம் அரு தனி தீவிற்குள் அதற்கு பின் காட்சிகள் நகர்வது படு சுவாரசியமாக தொடாமல் ரசிகப்படும் விலை மாதுக்கள். முக்தி பெறாத உயிர்களுக்காக கொண்டாடப்படும் விழா. ஆண் மகனின் தொடுதல்லுக்காக ஏங்கும் வெள்ளை அராய்ச்சியாளர். துரோகிகளுக்கு வழங்கப்படும் பரிசு மரணம் என ஒரு இருளின் ஊடே நகர்கிறது படம் அடுத்த நாள் கலை அவர்களின் பயணம் துவங்குகிறது. இது வரை நாம் பார்த்திராத இயற்கை சூழல் நம்மை வியக்க வை கின்றது. இது வரை நம் வாழ்வில் பார்த்திராத உலகிற்கு நம்மை அழைத்து செல்கிறார் பாப்ரிஸ். கடைசியாக ஒரு மர்ம தேசத்தில் நுழைகிறார்கள். கருப்பு காட்டுவாசிக் குழந்தைகள், விட்டு விட்டு போன படகு காரன் என பல திருப்பங்கள். தங்களது குழந்தையை தேடி போய் ஆபத்தில் மாட்டி விடும் ஜோடி. திரும்ப வழி இல்லாமல் ஒரு விதமான மன சிதைவுக்கு இம்மானுவேல் பெர்த் ஆளாகிவிட தனது கணவனையே தன் குழந்தையை கொன்றதாக குற்றஞ் சாட்டுகிறாள். மர்மமான முறையில்
அங்கு தோன்றும் அந்த குழந்தைகள் அவர்களை சுற்றி இருந்தவர்களை கொன்று விட்டு அவர்களை திரும்பி பார்க்கின்றனர். பெர்த் தலைவியாகிறாள். குழந்தைகள் அவளை தொடுக்கிறார்கள். பெர்த் ஒரு வித மன சிதைவோடு வானத்தை பார்த்து சிரிக்க குழந்தைகள் அவளின் முலை காம்புகளை தடுவி கொடுபொதொடு படம் முடிவடைகிறது. இதில் என்னை கவர்ந்தது பாப்ரிஸ் து வெல்ஸ் இயக்கமும் அவர் தேர்ந்தெடுத்த இடமகளும் தான். It is simply Marvelous and fuckin freekin.
நான் பார்த்த மிக சிறந்த திரை படங்களில் இதுவும்...

0 கருத்துகள்:
கருத்துரையிடுக